செந்தமிழ் படிப்பு சான்றிதழ்
Certificate In Classical Tamil Studies (CCT)
கண்ணோட்டம்:
தமிழ் மொழி மிக நீண்ட காலமாக வழக்கில் உள்ள செம்மொழியாகும். தமிழ் மொழியினில் இருக்கும் பல் வேறு வகையான இலக்கியங்கள் மற்றும் அதன் தரத்தினை கண்டால் தமிழ் மொழியின் இலக்கியங்கள் உலகின் மிகச்சிறந்த இலக்கியங்களில் ஒன்றாகக்கருதப்படும். தமிழ் மொழி சங்ககாலம் தொட்டு பாண்டிய மன்னர்களால் போற்றி வளர்க்கப்பட்டது . இம்மொழியின் சிறப்பியல்புகளை இச்சான்றிதழ் படிப்பில் அறிந்து கொள்ளலாம்
மொழி சிறப்புகள்:
இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒரு சில செம்மொழிகளில் ஒன்றாகும். திராவிட மொழிக்குடும்பத்தின் பொதுக்குணத்தினால் ஒலி மற்றும் சொல்லமைப்புகளில் சிறிய மாற்றங்களே ஏற்பட்டுள்ளதாலும் மேலும் கவனமாகப் பழைய அமைப்புக்களைக் காக்கும் மரபினாலும் பழங்கால இலக்கிய நடை கூட மக்களால் புரிந்து கொள்ளும் நிலையில் உள்ளது. எடுத்துக்காட்டாக, பள்ளிக் குழந்தைகள் சிறுவயதில் கற்கும் அகர வரிசையான ஆத்திசூடி 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்டது. திருக்குறள் ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டது.இலக்கண அடிப்படையில் தமிழ் ஒரு ஒட்டுநிலை மொழியாகும். தமிழில், பெயர் வகை, எண், வேற்றுமை, காலம், போன்றவற்றை விளக்கச் சொற்களுடன் பின்னொட்டுக்கள் சேர்க்கப்படுகின்றன. தமிழின் பொதுவான கருவி மொழியியல் (metalinguistic) சொற்களும் கலைச் சொற்களும் தமிழாகவே உள்ளன.இலக்கண அடிப்படையில் தமிழ் ஒரு ஒட்டுநிலை மொழியாகும். தமிழில், பெயர் வகை, எண், வேற்றுமை, காலம், போன்றவற்றை விளக்கச் சொற்களுடன் பின்னொட்டுக்கள் சேர்க்கப்படுகின்றன.
காலம்: 6 மாதங்கள்
தகுதி: 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்
கட்டணம்: ரூ 3000 /-
Sl.No | Subject Code | Subject Name | Max. Marks |
01 | CCT1 | செந்தமிழ் – ஒரு அறிமுகம் | 100 |
02 | CCT2 | செந்தமிழ் – கற்பிற்கும் முறைகள் | 100 |
03 | CCT3 | செந்தமிழும், தகவல் தொழில்நுட்பமும் | 100 |