A Non Government Self Governing Autonomous Council | Distance Education Centre | Study Centre |

வினா-விடை

Tamilnadu Councilவினா-விடை

தலையாய கேள்விகளும் விடைகளும்:

  1. தமிழ் ஒலிம்பியாட் என்றால் என்ன?

தமிழ்நாடு கவுன்சில் – ஒலிம்பியாட் தேர்வு என்பது கல்விப் போட்டியை பிரபலப்படுத்தும் ஒரு கல்வி நிறுவனம் மற்றும் பள்ளி மாணவர்களிடையே ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையை வளர்க்க உதவுகிறது. மேலும் மாணாக்கர்களின் தனித்தமிழ் திறனை வெளிக்கொணர உதவுகின்றது.

  1. வருடத்தில் எத்தனை முறை தமிழ் ஒலிம்பியாட் தேர்வுகள் நடத்தப்படும்?

வருடத்திற்கு இரண்டு முறை தமிழ் ஒலிம்பியாட் தேர்வுகள் நடத்தப்படும்.

  1. தமிழ் ஒலிம்பியாட் தேர்வுகளின் அமைப்பு மற்றும் முறை என்ன?

தமிழ் ஒலிம்பியாட் போட்டி நடத்தும் போது அதன் அமைப்புகளும் முறைகளும் உரிய விளக்கங்களோடு அறிவிக்கப்படும்

  1. தமிழ் ஒலிம்பியாட் தேர்வில் யார் யாரெல்லாம் பங்கு பெறலாம்?

தற்போது இத்தேர்வு ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை

படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது

  1. தமிழ் ஒலிம்பியாட்டிற்கான பாடத்திட்டம் என்ன?

தமிழ் ஒலிம்பியாட்டிற்கான பாடத்திட்டம் தமிழ்நாடு கவுன்சில் இணைய தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

  1. தமிழ் ஒலிம்பியாட்டில் வெற்றி பெறுபவர்களுக்கு என்ன பரிசுகள் வழங்கப்படும்?

வெற்றி பெறுபவர்களுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்

  1. தமிழ் ஒலிம்பியாட் தேர்வு எப்பொழுது நடத்தப்படும்?

தமிழ் ஒலிம்பியாட் போட்டி டிசம்பர் மற்றும் மே மாதங்களில் நடத்தப்படும்

  1. தமிழ் ஒலிம்பியாட் தேர்வுக்கான முடிவுகள் எப்பொழுது அறிவிக்கப்படும்?

தமிழ் ஒலிம்பியாட் தேர்வு முடிவுகள் முப்பது முதல் நாற்பத்தி ஐந்து நாட்களுக்குள் அறிவிக்கப்படும்

  1. தமிழ் ஒலிம்பியாட் தேர்வுக்கான முடிவுகளை நாங்கள் எவ்வாறு தெரிந்து கொள்ளலாம்?

தமிழ்நாடு கவுன்சில் இணைய தளத்தில் போட்டி முடிவுகள் அறிவிக்கப்படும்

  1. தமிழ் ஒலிம்பியாட் தேர்வு நிகழ் நிலையில் நடத்தப்படுமா அல்லது முடக்க நிலையில் நிலையில் நடத்தப்படுமா?

தற்போது தமிழ் ஒலிம்பியாட் தேர்வு நிகழ் நிலையில் நடத்தப்படும்.

  1. தமிழ் ஒலிம்பியாட்டில் பங்குபெறுவதால் மாணாக்கர் பெறும் பயன்கள் யாவை?

தமிழ் மொழி ஒரு செம்மொழியாகும். இப்போட்டியில் பங்குபெறுவதன் மூலம் மாணாக்கரின் மீத்திறன் மற்றும் மொழியாற்றல் பன்மடங்கு பெருகும். தமிழ்மொழியை தாய்மொழியாக கொண்ட குழந்தைகள் அனைவரும் பங்கு பெற்று அவர்களின் மொழித்திறனை வளர்த்துக்கொள்வது சிறந்த பயனை கொடுக்கும்.